(ஸ்ரீ. கதிரவேற்பிள்ளை.- மறுபதிப்பு.- சென்னை.- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,1910-)
வரலாறு
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கு.கதிரவேற்பிள்ளையின் அரும்பணியில் உருவான இவ்வகராதி மூன்று பகுதிகளைக் கொண்டதாக 1910,1912,1923 காலப்பகுதிகளில் தமிழ்ச் சொல்லகராதி என்னும் பெயருடன் வெளிவந்தபோதும் மதுரைத் தமிழ்ச்சங்கம் வெளியிட்டமையால் தமிழ்ச்சங்க அகராதி என்றே வழங்கியது. சொற்பொருளுக்கு அடிப்படை ஆதாரமாக நூற்சான்றுகளைப் பயன்படுத்தியமை இந்நூலின் புதிய முயற்சியாகும்.
ஒழுங்கமைப்பு
சொற்பொருளுக்கு இலக்கண இலக்கிய நூல்களிலிருந்து மேற்கோள்களை வழங்கிய முதலாவது தமிழ்-தமிழ் அகராதி என்ற சிறப்பு இவ்வகராதிக்கு உண்டு. 344 நூல்களிலிருந்து இவ் அகராதிக்கு மேற்கோள்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. சொல்லின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளதுடன் முன்னைய அகராதிகளில் இல்லாத பல புதிய சொற்களும் திருந்திய விளக்கங்களும் காணப்படுகின்றன. ஓரு சொல் பல பொருள்களுக்கு விளக்கம் தரும்போது 1,2 என எண் குறியிட்டுக் காட்டியிருப்பது ஓரு சொல்லுக்கு எத்தனை பொருள் என்பதை அடையாளங் காண உதவுகிறது.
No comments:
Post a Comment