(முத்துத்தம்பிப் பிள்ளை. யாழ்ப்பாணம்: நாவலர் அச்சகம்,1902)
வரலாறு
யாழ்ப்பாணத்து மானிப்பாய் முத்துத்தம்பிப் பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு இலங்கை இராஜ மந்திரசபை அங்கத்தவருள் ஒருவரான ஸ்ரீமான் பொ.குமாரசாமி முதலியார் அவர்களின் ஞாபகச் சின்னமாக வெளியிடப்பட்ட இந்நூல்; தமிழ் அகராதி வரலாற்றில் என்றும் நினைவில் வைத்திருக்கவேண்டிய ஒரு சாதனமாகக் கருதப்படுகிறது. நூலின் தலைப்பில் தமிழ் இதிகாச அகராதி எனக் குறிப்பிடப்பட்டிருப்பினும் கலைக்களஞ்சியப் பண்பே இதில் அதிகம் காணப்படுகிறது.
உள்ளடக்கம்
வேதாகம புராண இதிகாசங்களில் கூறப்பட்ட தெய்வங்கள், தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், அசுரர், அவதார புருஷர் போன்ற வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களையும், நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் போன்ற இடங்களின் வரலாறுகள், தமிழ்நாட்டின் பண்டைய அரசர், புலவர், வள்ளல்களின் வரலாறுகள் போன்றவை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஒழுங்கமைப்பு
இந்நூலில் உள்ளவை பெரும்பாலும் பல நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை. பல பதிவுகள் உள்ளதை உள்ளபடியே கூறுபவை, இன்னும் சில சுருக்கமாக்கப்பட்டவை, சில விரிவாக்கப்பட்டவை. பல பதிவுகள் கலைக்களஞ்சியம் போன்று விரிவான தகவலை உள்ளடக்கியவை.
No comments:
Post a Comment