ஆறுமுகநாவலர் (18-12-1822-05-12-1879)
நல்லு)ர் யாழ்ப்பாணம்
தமிழும் சைவமும் தழைக்க தனது வாழ்ககை முழுதும் பாடுபட்ட மகான். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் பின்னர் ஆசிரியரும். சிறந்த பதிப்பாசிரியர். தமிழ், ஆங்கிலம் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர், வண்ணார்பண்ணை சைவப் பிரகாசவித்தியாசாலையின் நிறுவுனர். மிகச் சிறந்த சமயச்சொற்பொழிவாளர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர்.
தமது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டகயமக வந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.
By Author+wikipedia
No comments:
Post a Comment