ஈழத் தமிழர்களின் உணவில் மிக முக்கிய இடம் பெறும் பொருள் தேங்காய். இது தேங்காய்த் துருவல், தேங்காய்ப் பால், எனப் பலவித வடிவங்களின் பயன்படுகின்றது. தேங்காய்ப்பால் இல்லாத கறியே இல்லை என்னுமளவிற்கு இதன் பயன்பாடு மிக அதிகமாகும்.
பிரதான காலை மாலை உணவுகளில் ஒன்றான பிட்டுக்கு தேங்காய் துருவல் சேர்க்கப்படுகின்றது. பிட்டின் துணை உணவுகளில் ஒன்றான சம்பலுக்கு தேங்காய்த் துருவலே பிரதானமாகும். மிளகாய் தூள் சேர்க்காத பால்கறி வகைகளுக்கு முதல்பால் மட்டும் சேர்க்கப்படும். குழம்பு முதலாம் பால், இரண்டாம் பால், மூன்றாம் பால் என மூன்று பாலையும் உள்ளடக்கும். வறைக்கு தேங்காய் துருவல் சேர்க்கப்படும்.
No comments:
Post a Comment