வாழும் மரபு

DIL is a pilot project of Foundation for Library Awareness (FOLA) to preserve the Living Heritage of Sri Lankan Tamils which could be act as an institutional repository of the image collections of FOLA.

Image collections are an essential component of FOLA’s print and artifact collections both of their artistic and documentary value which have been collected over the years since the inception of FOLA.

The images are being collected from various sources. The presently existing tangible and intangible heritage were produced by taking photographs. The heritage replaced by modern way of life and lost its existence were collected by scanning the pictures available from print resources such as books, journals, newspapers, paintings, and collecting from websites.

FOLA has designed this DIL in a systematic and constructive user friendly way with the support of Dspace, the open source library software to preserve the cultural heritage of Sri Lankan Tamils which is available on intranet. The selective images of DIL are available in this blog for dissemination.

இந்த எண்ணிம விம்ப நூலகமானது இலங்கைத் தமிழர்களின் வாழும் மரபு சார்ந்த தகவல்களைப் பாதுகாப்பதற்கான முதலாவது செயற்திட்டமாக நூலக விழிப்புணர்வு நிறுவகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள விம்பங்களில் நேரடியாகப் பெறப்படக்கூடியவை நேரடியாக ஒளிப்படமெடுப்பதனூடாகவும் எம்மிடமிருந்து மறைந்து போனவை எழுத்துமூல பதிவேடுகளிலிருந்து மீளுருவாக்கம் செய்யப்பட்டதாவும் உள்ளது.

Sunday, July 21, 2013

Tools

திருகை
பயறு உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பாக்குவதற்கோ அல்லது மாவாக்குவதற்கோ பயன்பட்ட வட்டவடிவில் அமைந்த மேலும் கீழும் இரு பாகங்களைக் கொண்ட கருங்கல்லினாலான சாதனம். இதன் மேற்பகுதியில் நடுவில் ஒரு துறை கரைப்பகுதியில் ஒரு துளை என இரு துளைகள் அமைந்திருந்கும். கீழ்ப்பகுதியில் நடுவில் ஒரு துளை அமைக்கப்பட்டிருக்கும். நடுவில் அமைந்திருக்கும் துளையானது இரும்புத்தண்டு ஒன்றின் மூலம் திருகையின் இரு பாகங்களையும் ஒன்றாகப் பொருத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தானியங்களை சிறிதுசிறிதாக உள்நுழைப்பதற்கு ஏற்ற வகையில் கீழ்ப்பகுதியிலுள்ள துளையின் விட்டத்தைவிட மேற்பகுதியிலுள்ள துளையின் விட்டமானது சற்றுப் பெரிதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். திருகையின் மேற்பகுதியை இலகுவாகக் சுழற்றுவதற்கு ஏற்றவகையில் கைபிடியாக தொழிற்படும் பொருட்டு மேலே அகன்றும் கீழே ஒடுங்கியுமிருக்கும் திருகையின் மேற்பகுதியின் கரையில் அமைந்திருக்கும் துளையில் இரும்புத்துண்டால் அல்லது மரக்கட்டையால் ஆன தண்டு பொருத்தப்பட்டிருக்கும்.

திருகையின் மேற்பகுதியை ஓரிரு தடவைகள் சுழற்றினால் தானியங்களை பருப்பாக  மாற்றலாம் மாவாக்கவிரும்பின் பலதடவைகள் சுழற்ற வேண்டும்.

No comments:

Post a Comment