வாழும் மரபு

DIL is a pilot project of Foundation for Library Awareness (FOLA) to preserve the Living Heritage of Sri Lankan Tamils which could be act as an institutional repository of the image collections of FOLA.

Image collections are an essential component of FOLA’s print and artifact collections both of their artistic and documentary value which have been collected over the years since the inception of FOLA.

The images are being collected from various sources. The presently existing tangible and intangible heritage were produced by taking photographs. The heritage replaced by modern way of life and lost its existence were collected by scanning the pictures available from print resources such as books, journals, newspapers, paintings, and collecting from websites.

FOLA has designed this DIL in a systematic and constructive user friendly way with the support of Dspace, the open source library software to preserve the cultural heritage of Sri Lankan Tamils which is available on intranet. The selective images of DIL are available in this blog for dissemination.

இந்த எண்ணிம விம்ப நூலகமானது இலங்கைத் தமிழர்களின் வாழும் மரபு சார்ந்த தகவல்களைப் பாதுகாப்பதற்கான முதலாவது செயற்திட்டமாக நூலக விழிப்புணர்வு நிறுவகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள விம்பங்களில் நேரடியாகப் பெறப்படக்கூடியவை நேரடியாக ஒளிப்படமெடுப்பதனூடாகவும் எம்மிடமிருந்து மறைந்து போனவை எழுத்துமூல பதிவேடுகளிலிருந்து மீளுருவாக்கம் செய்யப்பட்டதாவும் உள்ளது.

Thursday, July 25, 2013

Musical Instruments





உடுக்கு

Musical Instruments

பறைமேளம்
















Lamps



குப்பிவிளக்கு

கச்சான் விற்கும் பெண்கள் பயன்படுத்தும் விளக்கு. இது பெரும்பாலும் காற்றினால் அணைக்கப்படுவது குறைவு







Lamps


பழைய பெற்றோல்மாக்ஸ்

Lamps

தொங்கு விளக்குகள்


Wednesday, July 24, 2013

Social structures

வடமராட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள பழையகால கல்வீடு ஒன்றின் முகப்புப் பகுதி




வடமராட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள  கைவிடப்பட்ட நிலையிலுள்ள பழையகால கல்வீடு ஒன்றின் முகப்புப் பகுதி











வடமராட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள  கைவிடப்பட்ட நிலையிலுள்ள பழையகால கல்வீடு ஒன்றின் முன் தலைவாசல் பகுதி

Social Structures


சங்கடப்பலகை

வீதியால் பயணஞ் செய்வோர் இளைப்பாறும் பொருட்டு வீட்டின் முன்புற நுழைவாயிலில் அமைக்கப்பட்ட சிறு வீடு போன்ற நிழல்கூடங்களில் இதுவும் ஒன்று. அமர்வதற்கு வசதியாக இரு கரையிலும் குந்துகள் அமைக்கப்பட்டிருக்கும். இதற்கு அமைக்கப்படும் படலை சிறந்த மரவேலைப்பாடுகளைக் கொண்டது. ஆரம்பத்தில் ஓட்டுக்கூரையே பொதுவழக்காக இருந்தது. காலப்போக்கில் அவரவர் பொருளாதார வசதிக்கேற்ப இது கொங்கிறீற் கூரையாகவும் மாற்றம் பெற்றது. 



வடமராட்சிப் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள  சங்கடப்படலை(2013)

























Communication Media


ஆரம்பகால தொலைபேசி

Boxes



பித்தளையால் செய்யப்பட்ட ஆபரணப் பெட்டி













Tools


பித்தளைக் குண்டுத்தோசைச் சட்டி












கால் வைத்த பித்தளைக் குண்டுத்தோசைச் சட்டி




Cottage Industries

எண்ணெய் உற்பத்தி



Tuesday, July 23, 2013

Customs





கன்னிக்கால் நடுதல்




யாழ்ப்பாணத்தின் கல்வியங்காட்டு  என்னும் கிராமத்திலுள்ள செங்குந்தர்(கைக்கோளர்) மரபில் 2011இல் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கன்னிக்கால் நiடும் நிகழ்வு









Customs,

மோதிரம் மாற்றுதல்

யாழ்ப்பாணத்தின் கல்வியங்காட்டு  என்னும் கிராமத்திலுள்ள செங்குந்தர்(கைக்கோளர்) மரபில் 2011இல் இடம்பெற்ற திருமண நிகழ்வில்  மோதிரம் மாற்றும் நிகழ்வு
























Customs


சுண்ணம் இடித்தல்


Customs



பந்தம் பிடித்தல்

Customs


மரண ஊர்வலம்

Customs

அரப்பெண்ணெய் வைத்தல்



யாழ்ப்பாணத்தின் கல்வியங்காட்டு  என்னும் கிராமத்திலுள்ள செங்குந்தர்(கைக்கோளர்) மரபில் 1994இல்  நடைபெற்ற மரணச்சடங்கில் அரப்பெண்ணெய் வைக்க்கும் நிகழ்வு










Customs


தாலி


Customs

தாலி


Communication Media

மின்சாரத்தில் இயங்கும் கிராமபோன் தட்டு

Communication Media



கிராமபோன் தட்டு

Communication Media

வால்வ் ரேடியோ


Monday, July 22, 2013

Lamps

Lamps

இரட்டைத்திரி விளக்கு


Social Structures

தெருமூடிமடம்

வடமராட்சியில் பருத்தித்துறை சிவன்கோவிலுக்கு முன்பாக உள்ள தெருமூடிமடம். பயணம் செய்வோர் தங்கி இளைப்பாறும் பொருட்டு அமைக்கப்பட்டதே தெருமூடி மடங்களாகும். திருவிழாக்காலங்களில் இன்றும் உற்சவ காலம் முடியும் வரை தற்காலிக தெருமூடிப் பந்தல்கள் அமைக்கப்படுவது இன்று வழமையில் உள்ளது. எனினும் இந்தத் தெருமூடி மடமானது நிரந்தரமானது. ஓட்டுக்கூரையுடன் இருபுறமும் பயணிகள் தங்கி இளைப்பாறக்கூடிய வகையில் திண்ணைகளையும் கொண்ட நிரந்தர அமைப்பாகும். இத்தகைய அமைப்பை பெரும்பாலான கோவில்களின் முன்புறம் இன்றும் காணமுடியும். 







Records of thoughts

சொற்பிறப்பு-ஓப்பியல் தமிழ் அகராதி
(An Etymological and comparative lexicon of the  Tamil Language.- நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்)
இப் புதிய தமிழ்- ஆங்கில- தமிழ் அகராதி சொற்பிறப்பியலையும் படிப்படியாய் மாற்றமடையும் சொற்கருத்தியலையும் ஆராயும் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. பழைய இலக்கியங்களில் காணப்படும் சொல்லுருவங்களுடன் தமிழ்ச்சொற்கள் யாவும் ஒப்புநோக்கப்படுவதுடன் பதிணெண் திராவிட மொழிகளுடன் குறிப்பாக மலையாளம், கன்னடம், தெலுங்கு என்பவற்றுடன் தமிழ் மொழியின் ஒப்பு ஆராயப்படுகிறது.
வடஐரோப்பாவிலுள்ள பின்லாந்து தேசம் முதல் வடகீழ் ஆசியாவிலுள்ள மொங்கோலியா தேசம் ஈறாகக் கிட்டத்தட்ட 42 மொழிகள் காணப்பட்டன. அதுபோல் மேற்கு ஆசியாவில் அராபிய, எபிரேய, கல்டேய, சிரிய, பபிலோனிய மொழிகளும் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளிலும் ஈரான், இந்தியாவிலும் 45 இந்து ஐரோப்பிய மொழிகளுமென வழங்கப்பட்ட 96 மொழிகளுடன் ஆதித் திராவிட மொழிக்கிருந்த தொடர்புகள் துலக்கமாகவும், தெளிவாகவும், இதில் காட்டப்பட்டுள்ளன. இதன் முதல் 6 பகுதிகளும் 1938-1946 காலப்பகுதியில் வெளியானது. இரு பெரும் தொகுதிகளில் ஒவ்வொன்றும் 1000 பக்கங்களுடன் 20 பகுதிகளாக வெளியிட திட்டமிடப்பட்ட போதிலும் 1947 ல் ஞானப்பிரகாசர் மறைவின் பின்னர் 7வது பதிப்பு தும்பளைக் கலாநிதி சிங்கராயர் தாவீது அடிகளால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த 7வது பதிப்பு துப்பறியும் நாவல் போன்று இயற்றப்பட்டமையால் இது லீலா கதை எனவும் அழைக்கப்படுகிறது. இதன் முதலாம் பாகம் 1970 ல் வெளியிடப்பட்டது.

Records of thoughts

தமிழ்ச்சொல்லகராதி
(ஸ்ரீ. கதிரவேற்பிள்ளை.- மறுபதிப்பு.- சென்னை.- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,1910-)
வரலாறு
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கு.கதிரவேற்பிள்ளையின் அரும்பணியில் உருவான இவ்வகராதி மூன்று பகுதிகளைக் கொண்டதாக 1910,1912,1923 காலப்பகுதிகளில் தமிழ்ச் சொல்லகராதி என்னும் பெயருடன் வெளிவந்தபோதும் மதுரைத் தமிழ்ச்சங்கம் வெளியிட்டமையால் தமிழ்ச்சங்க அகராதி என்றே வழங்கியது. சொற்பொருளுக்கு அடிப்படை ஆதாரமாக நூற்சான்றுகளைப் பயன்படுத்தியமை இந்நூலின் புதிய முயற்சியாகும்.

ஒழுங்கமைப்பு
சொற்பொருளுக்கு இலக்கண இலக்கிய நூல்களிலிருந்து மேற்கோள்களை வழங்கிய முதலாவது தமிழ்-தமிழ் அகராதி என்ற சிறப்பு இவ்வகராதிக்கு உண்டு. 344 நூல்களிலிருந்து இவ் அகராதிக்கு மேற்கோள்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. சொல்லின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளதுடன் முன்னைய அகராதிகளில் இல்லாத பல புதிய சொற்களும் திருந்திய விளக்கங்களும் காணப்படுகின்றன. ஓரு சொல் பல பொருள்களுக்கு விளக்கம் தரும்போது 1,2 என எண் குறியிட்டுக் காட்டியிருப்பது ஓரு சொல்லுக்கு எத்தனை பொருள் என்பதை அடையாளங் காண உதவுகிறது.

Records of thoughts

அபிதான கோசம்
(முத்துத்தம்பிப் பிள்ளை. யாழ்ப்பாணம்: நாவலர் அச்சகம்,1902)

வரலாறு
யாழ்ப்பாணத்து மானிப்பாய் முத்துத்தம்பிப் பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு இலங்கை இராஜ மந்திரசபை அங்கத்தவருள் ஒருவரான ஸ்ரீமான் பொ.குமாரசாமி முதலியார் அவர்களின் ஞாபகச் சின்னமாக வெளியிடப்பட்ட இந்நூல்; தமிழ் அகராதி வரலாற்றில் என்றும் நினைவில் வைத்திருக்கவேண்டிய ஒரு சாதனமாகக் கருதப்படுகிறது. நூலின் தலைப்பில் தமிழ் இதிகாச அகராதி எனக் குறிப்பிடப்பட்டிருப்பினும் கலைக்களஞ்சியப் பண்பே  இதில் அதிகம் காணப்படுகிறது.

உள்ளடக்கம்
வேதாகம புராண இதிகாசங்களில் கூறப்பட்ட தெய்வங்கள், தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், அசுரர், அவதார புருஷர் போன்ற வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களையும், நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் போன்ற இடங்களின் வரலாறுகள், தமிழ்நாட்டின் பண்டைய அரசர், புலவர், வள்ளல்களின் வரலாறுகள் போன்றவை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஒழுங்கமைப்பு
இந்நூலில் உள்ளவை பெரும்பாலும் பல நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை. பல பதிவுகள் உள்ளதை உள்ளபடியே கூறுபவை, இன்னும் சில சுருக்கமாக்கப்பட்டவை, சில விரிவாக்கப்பட்டவை. பல பதிவுகள் கலைக்களஞ்சியம் போன்று விரிவான தகவலை உள்ளடக்கியவை.

Personalities


தனிநாயகம் அடிகள் (12-08-1913-01-09-1980) 

ஈழத்துத் தமிழறிஞர்,  கல்வியாளர். 1964 ஆம் ஆண்டு சனவரியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்  அமைக்க அடிகோலியவர். 1964 சனவரியில் தில்லியில் நடைபெற்ற கீழ்த்திசை மகாநாட்டில் உலகெங்கணும் இருந்து கலந்துகொண்ட அறிஞர்களைத் திரட்டி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என்ற நிறுவனம் அமையக் கால்கோள் இடப்பட்டது. தனிநாயக அடிகளாரின் சிந்தனையில் உதித்த இத்திட்டத்தைச் செயற்படுத்த அவர் தமிழ்கூறு நல்லுலகின் தமிழாய்ந்த கல்விமான்களையெல்லாம் ஒன்றுதிரட்டி அதற்குச் செயலுருவம் கொடுத்தார். இந்த நிறுவனமே தொடர்ச்சியாக எட்டு உலகளாவிய ரீதியிலான உலகத் தமிழாராய்ச்சி மகாநாடுகளை நடாத்தியது. அடிகள் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நாலு மகாநாடுகள் நடத்தப் பெற்றன. இவர் பொதுச் செயலாளராவிருந்து முதல் மகாநாட்டினை கோலாலம்பூரில் பல உலகநாடுகளின் தமிழ் ஆய்வாளர்களை வரவழைத்து வெற்றிகரமாக நடாத்திய பெருமை இவரைச் சர்ந்ததே.


Source: Wikipedia

Personalities


வித்துவசிரோன்மணி சி.கணேசையர் (01-041878-08-11-1958)
  புன்னாலைக்கட்டுவன் யாழ்ப்பாணம்
பல்துறை ஆளுமைகள்:
சிறந்த உரையாசிரியர் - இரகுவமிச உரை, மகாபாரதம் சூதுபோர்ச்சருக்க உரை, ஒருதுறைக்கோவை உரை, அகநானூறு களிற்றுயானைநிர உரை.
இலக்கணப் பேரறிஞர் - தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்
கட்டுரையாளர் - செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, ஈழகேசரி பத்திரிகைகளில் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக்கட்டுரைகள்
பாடபேத ஆய்வாளர் -
விவாத அறிஞர் - வெளிவந்த இடங்கள் செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, கலாவல்லி, ஞானசித்தி,ஈழகேசரி, சுதேசநாட்டியம்.
கவிபாடும் புலமிக்கோன் -  திருச்செல்வச்சந்நிதி நான்மணிமாலை, புன்னை மும்மணிமாலை, வருத்தலைவிளான் மருதடி விநாயகர் பிரபந்தம், வருத்தலைவிளான் பிடாரத்தனை கண்ணகை அம்மன் ஊஞ்சல், மேலைக்கரம்பொன் சண்முகநாதன் திருவிரட்டை மணிமாலை.  சாற்றுகவிகள், சமரகவிகள், தனிப்பாடல்கள். யாப்பு வடிவங்கள் வெண்பா, விருத்தம், அகவல், கட்டளைக்கலித்துறை
நூலாசிரியன் - ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம், சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவர் வரலாறு, குசேலர் சரிதம்
போதானாசிரியர் - வண்ணார்பண்ணை விவேகானந்த வித்தியாசாலை, நாவலர் காவிய பாடசாலை, நயினாதீவு சைவப்பாடசாலை, சுன்னாகம் பிராசீன பாடசாலை,
பட்டங்கள்: பண்டிதர், வித்துவான், மகாவித்துவான், வித்துவசிரோண்மனி, தொல்காப்பியக்கடல், இலக்கணஞாயிறு,

Personalities


ஆறுமுகநாவலர் (18-12-1822-05-12-1879)
 நல்லு)ர் யாழ்ப்பாணம்


தமிழும் சைவமும் தழைக்க தனது வாழ்ககை முழுதும் பாடுபட்ட மகான். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் பின்னர் ஆசிரியரும்.  சிறந்த பதிப்பாசிரியர். தமிழ், ஆங்கிலம் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர், வண்ணார்பண்ணை சைவப் பிரகாசவித்தியாசாலையின் நிறுவுனர். மிகச் சிறந்த சமயச்சொற்பொழிவாளர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர்.

தமது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல்,  நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டகயமக வந்தாதியுரை,  திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.


By Author+wikipedia


Personalities




கல்லடி வேலுப்பிள்ளை ( 07-03-1860-1944  வசாவிளான், யாழ்ப்பாணம்)

ஆசுகவி என தமிழர்களால் போற்றப்பட்டவர. சுதேசநாட்டியம் என்ற இதழின் சிற்பி. ஆறுமுகநாவலருக்குப் பின்னர் தமிழ்மொழியில் வசன நடையை வளம் கொழிக்கச் செய்த சான்றோரில் இவரும் ஒருவர். இவரால் எழுதி 1918இல் வெளியிடப்பட்ட யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஈழ வரலாற்றையும் சாதிகளின் பின்னணியையும், இடப்பெயர்களையும் சொல்லும் மிகச் சிறந்த நூலாக போற்றப்படுகின்றது. கவிதை நூல்களுள் கதிர மலைப் பேரின்பக் காதல், மேலைத் தேய மதுபான வேடிக்கைக் கும்மி, உரும்பிராய் கருணாகர விநாயகர் தோத்திரப் பாமாலை ஆகியன பெரும் பெயர் பெற்றன.

Personalities

புலவர்மணி நவநீதகிருஷ்ண பாரதியார்
 
 காந்தி அடிகளாரின் கொள்கைகளைப் பின்பற்றி இவர் எழுதிய காந்திவெண்பா பிரசித்திபெற்றது. சேர்.பொன் இராமனாதனின் மதிப்புக்கு உரிய இவர் இராமந்தன்கல்லூரியிலும், பரமேஸ்வராக்கல்லூரியிலும் கடமை புரிந்தார். 1922 இல் இவரால்  வெளியிடபட்ட 'உலகியல்  விளக்கம்' எனும் செய்யுள் நூல்
உலக பிரசித்தி பெற்றது.

Personalities

சுவாமி விபுலானந்தர் (27-03-1892-19-07-1947)
காரைதீவு - மட்டக்களப்பு


கொழும்பு அரசினர் தொழினுட்பக் கல்லூரியின் உதவி விரிவுரையாளர். யாழ் சம்பத்தரிசியார் கல்லூரியின் விஞ்ஞான ஆசிரியர். மானிப்பாய் இந்துக் கல்லூரியின. அதிபர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினதும், இலங்கைப் பல்கலைக்கழகத்தினதும் முதல் தமிழ் பேராசிரியர். உலகம் போற்றும் 'யாழ்நூலின்' ஆக்ககர்த்தா. தமிழர் பெருமைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு

Lamps

சிக்கன விளக்கு




Lamps

தூண்டாமணி விளக்குகள்










Lamps


தகரத்தாலான குப்பி விளக்கு





Lamps


தூண்டாமணி விளக்குகள்